பூங்காவாக மாறும் மீதொட்டமுல்ல குப்பை மேடு

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்
121Shares

மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு தீர்வுகாணும் முகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பூங்காவின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் எதிர்வரும் ஜூலை மாதம் அதனை திறந்து வைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே உருவாக்கினார்.

28 ஏக்கரில் 21 மீற்றர் உயரத்திற்கு குப்பை மேடு காணப்பட்டது.

குப்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடத்தில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

மீதம் இருக்கும் இடத்தில் நகரம் ஒன்றை உருவாக்குமாறு மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு யோசனை முன்வைப்பதாகவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.