அரசாங்கத்திற்கு எதிரான இரு வாக்கெடுப்புகள் தோல்வி

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

இரண்டு அமைச்சுக்களின் நிதிச் செலவீன ஒதுக்கீடு குறித்த பிரேரணைகள் தோல்வியடைந்துள்ளன.

அமைச்சர் வஜிர அபேவர்தனவின் உள்விவகார அமைச்சு மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியனவற்றின் செலவீன ஒதுக்கீட்டு பிரேணைகள் இன்று நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உள்விவகார அமைச்சின் செலவீன ஒதுக்கீட்டு பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செலவீன ஒதுக்கீட்டு பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இந்த வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்ட போது ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் சொற்பளவில் பிரசன்னமாகியிருந்தமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.