பின்பகுதி நுழைவாயில் வழியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஜனாதிபதி

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் பாதையில் ஒரு தொகுதி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்பகுதி நுழைவாயில் வழியாக நாடாளுமன்றத்திற்குள் சென்றுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மொழி தொடர்பிலான பிரிவிற்காக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது எனக் கோரி மாணவர்கள் நேற்று இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக்கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பயணித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி வழமையாக செல்லும் பாதையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய காரணத்தினால், நாடாளுமன்றின் முன்வாயில் வழியாக செல்லாது பின் வாயில் வழியாக அவர் நாடாளுமன்றிற்குள் பிரவேசித்துள்ளார்.