கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புறக்கட்டச்சேனை பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் பாடசாலை காணி , குடியிருப்பு காணி, வாழ்வாதார காணி என்பனவற்றினை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
வெள்ள அரிப்பின் காரணமாக பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. எனவே இராணுவ முகாம்கள் காணப்படும் பகுதிகள் வெள்ள அரிப்பிற்கு உள்ளாகாத பகுதி எனவே குறித்த பாடசாலை காணிகளை உடனடியாக பாடசாலை நிர்வாகத்திடம் விடுவித்து ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
இது குறித்து நேற்று இடம்பெற்ற வடகிழக்கு அபிவிருத்தி கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கமைய பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.