மகாவலி திட்டம் என்ற போர்வைக்குள் காணிகளை அபகரிக்க நடவடிக்கை

Report Print Kanmani in பாராளுமன்றம்
48Shares

தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அமைச்சர்களுக்கும், அமைச்சர்களின் உறவினர்களுக்கும்,முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்க மகாவலி அதிகார சபை திட்டமிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மகாவலி திட்டம் என்ற போர்வைக்குள் காணிகளை அபகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்ற மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.