மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது?

Report Print Murali Murali in பாராளுமன்றம்

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பேசப்படுகின்றது. இதில் 500 மில்லியன் ரூபா பங்கு கிழக்கு மாகாண ஆளுனரின் புதல்வருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னால் உள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறியப்படும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது சிறந்ததது” என அவர் கூறினார்.

இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, “சட்டரீதியில் இதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா என்று சபாநாகயர் கரு ஜயசூரிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

அப்போது விசாரணை நடத்தப்படும் இராஜாங்க அமைச்சர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.