நாட்டினுடைய பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாக்குதல் இடம்பெற்றது

Report Print Malar in பாராளுமன்றம்

நாட்டில் இடம்பெற்ற இந்த தாக்குதல் இரண்டு விடயங்களை சொல்லி இருக்கின்றது ஒன்று இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பது, இரண்டாவது மக்கள் செறிந்து வாழுகின்ற கூட்டமாக இருக்கின்ற இடங்களிலே தாக்குதலை மேற்கொள்வது என்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களிலே உயிர் நீத்த எங்களுடைய உறவுகளுக்கும், காயப்பட்டு இருக்கின்ற எங்களுடைய சொந்தங்களுக்கும் இந்த சபையிலே நான் அஞ்சலியையும், குண்டு தாக்குதலுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டில் இடம்பெற்ற இந்த தாக்குதல் இரண்டு விடயங்களை சொல்லி இருக்கின்றது. ஒன்று இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பது முதலாவது நோக்கம்.

இரண்டாவது நோக்கம் மக்கள் செறிந்து வாழுகின்ற கூட்டமாக இருக்கின்ற இடங்களிலே தாக்குதலை மேற்கொள்வது. இந்த திட்டத்துடன் இரண்டு விடயங்களையும் தான் அவர்கள் கையாண்டு இருக்கிறார்கள்.

ஒரு விடயத்தை நாங்கள் பார்க்க வேண்டும். மக்கள் செறிந்து வாழுகின்ற இடங்களிலே தான் இந்த தாக்குதல் நடக்கிறது.

ஆனால் எங்களுடைய சிந்தனை எல்லாம் கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்பாக தாக்குதல் நடத்தப்பட்டதால் அதனை நோக்கியே தான் இருக்கின்றது.

இந்த தீவிரவாதிகள் சிலவேளைகளில் தங்களுடைய தாக்குதலை மாற்றி செய்கின்ற வாய்ப்புக்களை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக மக்கள் செறிந்து வாழுகின்ற அல்லது வழிபடுகின்ற வணக்க ஸ்தலங்களில் மக்களுடைய செயற்பாடு காணப்படுகிறது.

பயங்கரவாதி அங்கு வெடிக்கின்ற போது பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அங்கு காணப்படுகிறன.

ஆகவே அந்த விடயத்திலே அரசாங்கம் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.