என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள்! ரிஷாட் கோரிக்கை

Report Print Kanmani in பாராளுமன்றம்

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

பயங்கரவாத்திற்கு மார்க்கமோ, நிறமோ, கட்சியோ இல்லை . சர்வதேச பயங்கரவாதம் இங்குள்ள சில இளைஞர்களையும் தம்வசப்படுத்தி இந்த காட்டுமிராண்டித்தன செயலை மேற்கொண்டு நமது நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளது.

முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி இந்த கொடிய பயங்கரவாத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர்.

அது மாத்திரமின்றி இந்த குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு துன்பத்திலிருக்கின்ற அப்பாவி மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்குகொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

பள்ளிவாயல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஒரு போதும் முஸ்லிம் மக்கள் வாள் போன்ற கத்திகளை தம்வசம் வைத்திருப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வாள் போன்ற கத்திகளை தம்வசம் வைத்திருப்பது தொடர்பாக விசாரணை நிறைவு பெறும் வரை அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சர்வதேசத்துடன் இணைந்த கட்சி,மத,மார்க்கம் இன்றிய பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்தின் பேரில் மேற்கொண்ட தாக்குதல் அனைத்து இஸ்லாமிய மக்களையும் வேதனையின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

10 பேர் செய்த பாவங்களை 25 இலட்ச முஸ்லிம்கள் மீது திணிக்காதீர்கள்.அரசியல் இலாபத்திற்காக நாங்களே கொண்டு வந்து குண்டு தாக்குதல் மேற்கொண்டது போல் பேசுவதை அனைவரும் நிறுத்துங்கள்.இனியொரு யுத்தம் எமக்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.