13ம் திகதி தாக்குதல் நடத்தப்படலாம்? பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Murali Murali in பாராளுமன்றம்

தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பிள்ளைகளை இன்னும் பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்கின்றார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எதிர்வரும் 13ம் திகதி தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பிள்ளைகளை இன்னும் பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்கின்றார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தார். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 13ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம், வெள்ளவத்தை, நாவல உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.