அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட உள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சீர்குலைந்து உள்ளமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலைமையினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.