ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! சற்று முன்னர் சபாநாயகரின் அறிவிப்பு

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்படி பிரேரணை குறித்து விவாதம் செய்வதற்காக திகதியொன்றை நிர்ணயம் செய்வதற்காக இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.