இலங்கையில் மொஹம்மட் சஹ்ரானின் முக்கிய தளமாக இருந்த இடத்தின் இன்றைய நிலை

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

மொஹம்மட் சஹ்ரானின் முக்கிய தளமாக இருந்த கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் இயல்பு வாழக்கை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,

மொஹம்மட் சஹ்ரானின் முக்கிய தளமாக இருந்தது கிழக்கு மாகாணம். அதிலும் மட்டக்களப்பு மாவட்டம்.

இன்று கிழக்கு மாகாணத்திலே இன்னும் பாடசாலை மாணவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தினம் தினம் பாடசாலை அதிபர்கள் எமக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி மாணவர்களின் வருகையானது மிகமிக குறைவாக இருக்கிறது என கூறுகின்றார்கள்.

மாணவர்களின் வருகையே குறைவாக இருக்கின்ற போது எவ்வாறு இந்த நாட்டில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.