அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! ஜுலை முதலாம் திகதி முதல்...

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு 7800 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers