சிங்கள நபரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால்! உண்மை நிலையை போட்டுடைத்த ரதன தேரர்

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால் சுட்டுக் கொலை செய்கின்றனர், இது தான் உண்மையான நிலை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைத்தனர். தலீபான் உட்பட ஜிஹாத் என்ற அவர்களது புனித போரில் ஈடுபட்டுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் இந்த உலகில் உருவாவது இஸ்லாத்தினதும், அல்லாஹ்வினதும் பெயரிலேயே ஆகும் என்பதற்கு முடியுமானால் பதிலளிக்கவும் என கோரியுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தானை போன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது. யார் அதனை தடை செய்தது?

ஆப்கானிஸ்தானில் பாடசாலைகளுக்கு பெண்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்தால் சுட்டுக் கொலை செய்கின்றனர்.

அத்துடன், இதுதான் உண்மையான நிலை. சுட்டுக் கொலை செய்யாவிட்டாலும் அந்த பெண்ணை கடுமையாக தண்டித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளிலும் இன்று பெண்களுக்கு கற்றலுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இசைப் பயிற்சி, நடனக்கலை மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் அடிப்படை மதவாத செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers