ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Rakesh in பாராளுமன்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.