ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர வேண்டும் - ஹிருனிகா

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சரியான விடயமாகும், எனினும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் மட்டும் இது கொண்டு வரப்படக் கூடாது.

இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை தயாரித்தால் அதில் 75 பேரின் கையொப்பங்களை நான் திரட்டித் தருவேன்.

மஹிந்த ராஜபக்ச தமக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவார் என அண்மையில் ஜனாதிபதி மைத்திரி கூறியிருப்பதாக அறிந்தேன்.அவ்வாறு வேட்பாளர் பதவி வழங்கினால் மலர்மொட்டு கட்சியின் கதி அவ்வளவு தான்.

நான்கு ஆண்டுகள் காலத்தை பின்நோக்கி நகர்த்த முடியுமாயின் நான் ஜனாதிபதி தொடர்பில் எடுத்த தீர்மானத்தை மாற்றிக் கொள்வேன் எனவும் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

Latest Offers