சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை! இராணுவம் ஏன் இப்படி செய்கின்றது?

Report Print Murali Murali in பாராளுமன்றம்

அக்மீமன பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழக்க காரணமாக அமைந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான பொறுப்பை இராணுவம் ஏற்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“காலி உபனந்த தேசிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், இராணுவ சிப்பாய் ஒருவரை நியமித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் கடற்படை உறுப்பினர், உதய பிரதீப் குமார உயிரிழந்திருந்தார். எனினும் இராணுவம் அவர் ஆயுதத்தை பறித்துச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கின்றது.

மனசாட்சி இல்லையா? தன்னுடைய தந்தை தன்னுடைய காலடியில் விழுந்ததாக உயிரிழந்தவரின் பிள்ளை தெரிவிக்கின்றது. சபைக்கு தலைமைத்தாங்கும் உறுப்பினரே நீங்கள் ஒரு தாய். நான் ஒரு தந்தை.

இது எப்படியான ஒரு நிலைமை. தம்முடைய சிப்பாய் ஒருவரினால் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஏன் இராணுவத்தால் குறிப்பிட முடியாது? இதற்கு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும்.

முழு இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி பொது மக்களை கொலை செய்யப்போவது இல்லையே? இந்தப் தவறை இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பேற்று அந்த குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குங்கள்.

அதனைவிட இந்த தவறுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers