கல்முனையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு வரலாறு கிடையாது? நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை

Report Print Murali Murali in பாராளுமன்றம்

கல்முனையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு வரலாறு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை உடன் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கல்முனையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு ஒரு வரலாறு இருக்கின்றது எனவும், தமிழ் மக்களுக்கு அவ்வாறு வரலாறு எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அப்பட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பூர்வீக குடிகள். அப்படிப்பட்டவர்களை பார்த்து வரலாறு இல்லாதவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கேவலமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ள கருத்தை உடன் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆதங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.