இலங்கை இராணுவத்திற்குள் பதிவுகள் இல்லாமல் பணியாற்றும் வைத்தியர்கள்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பயிற்சிப் பெற்ற சில வைத்தியர்கள் இலங்கை இராணுவத்தில் எவ்வித பதிவுகளுமின்றி பணியாற்றி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் கல்வி கற்று விட்டு வந்துள்ள இந்த வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யகொள்ளப்பட வேண்டும்.

ஆயினும் அவர்கள் அவ்வாறு பதிவு செய்து கொள்ளாமல் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சாதாரணமாக வெளிநாட்டில் பயிலும் இலங்கை மருத்துவர்கள், இலங்கை மருத்துவ சபையில் ஒரு உள்ளக பயிற்சிக்கு தோற்ற வேண்டும் அதன்பின் அவர்கள் அதில் தேறினால் மாத்திரமே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களாக கருதப்படுவார்கள் என்றாலும் அவ்வாறு பதிவு செய்யப்படாத பலர் இவ்வாறு இராணுவத்தில் கடமையாற்றுவதாகவே அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இராணுவம் இது தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.