மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுவதில்லை!

Report Print Gokulan Gokulan in பாராளுமன்றம்

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஏற்றுமதி, இறக்குமதியில் நாங்கள் வெளிநாடுகளின் மூலப்பொருட்களில் தங்கியிருக்கின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது அரபு நாடுகளில் இருந்தாகும்.

அதேபோல் இங்கிருந்து அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்வதும் அரபு நாடுகளுக்காகும். ஆனால் ஏற்றுமதியை ஊக்குவிக்க நேரடி பங்களிப்புச் செய்யும் அரபு நாடுகள் தொடர்பாக அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் தவறான கருத்துக்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கான முறையான அனுமதியைப் பெற்று ஆவணத்தைச் சமர்ப்பித்த பின்னரும் அந்தப் பல்கலைக்கழகத்தை ஒரு சமூகத்துக்கு எதிராக பழிதீர்க்கும் விடயமாகப் சிலர் பயன்படுத்துகின்றனர்.

இது இனங்களுக்கிடையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும். முஸ்லிம், இஸ்லாம், தௌஹீத், ஷரிஆ என்பன எம்முடன் தொடர்புபட்டவை.

பௌத்தர்களின் வழிபாடுகள் பாளி மொழியிலும் இந்துக்களின் வழிபாடுகள் சமஸ்கிருத மொழியில் கொண்டுசெல்லப்படுவதைப் போன்று முஸ்லிம்களின் வழிபாடு தொடர்பான செயற்பாடுகள் அரபுமொழியில் கொண்டு செல்லப்படுகின்றன.

குர்ஆன் என்பது இறைவனின் வாக்கியம் அது இறைசொல். அரபு பாசையிலேயே ஐந்து வேளை தொழுகையை மேற்கொள்ள வேண்டும்.

எந்தமொழியில் பேசினாலும் அரபு மொழியிலேயே ஐந்து வேளைத் தொழுகைக்கான ஓதல்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

அரபு மொழியை கற்பிக்கவே நாட்டில் மதரஸாக்கள் இருக்கின்றன. இங்கு பயங்கரவாதம் போதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்துக்குள் அடிப்படைவாதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.