கோத்தபாயவால் ஏவப்பட்ட குழுவினரால் என் மீது துப்பாக்கிச்சூடு! சபையில் போட்டுடைத்த எம்.பி

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தான் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

2011ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் ஏழாம் திகதி நான் அநுராதபுரம், உடுக்குளம் பகுதியில் நாடாளுமன்ற அமர்விற்காக வந்து கொண்டிருந்த போது, அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் ஏவப்பட்ட பரா மில்ட்டரி குழுவினரால் என் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

என்ற போதும் இந்த சம்பவத்தில் தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக அவர் கூறியுள்ளார்.