நாடாளுமன்றில் பிரதமர் ரணிலுக்கு நன்றி கூறிய கூட்டமைப்பின் உறுப்பினர்!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்திசெய்ய ஐந்து வருட திட்டத்தின் மூலம் பெளதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

மன்னார் மாவட்டவைத்தியசாலையில் சீ.டீ.ஸ்கேன் இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அதனை பெற்றுக்கொள்ள பிரதமர் 8 மில்லியன் ரூபா ஒத்துக்கி இருக்கின்றார்.

அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். குறித்த வைத்தியசாலையில் சீ.டி.ஸ்கேன் இல்லாததன் காரணமாக நோயாளர்கள் அந்த ஸ்கேனை செய்துகொள்ள யாழ்ப்பாணம் அல்லது வுவுனியாவுக்கே செல்லவேண்டும்.

அத்துடன் சீ.டி.ஸ்கேன் குறித்த வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டால் அதனை பாதுகாப்பாக அங்கு வைப்பதற்கு அறை இல்லாமல் இருக்கின்றது. அதனால் அதற்கான அறையொன்றை நிர்மாணித்துக்கொள்ள தேவையான வசதிகளை தரவேண்டும்.

இந்நிலையில், மன்னார் மாவட்டவைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ள இருக்கும் சீடீ ஸ்கேனை வைக்க பாதுகாப்பான இடம் அமைத்துத்தரவேண்டும்.

அதேபோன்று சிறுவர் விடுதியில் அடிப்படை தேவைகள் நிறைய காணப்படுகின்றன. அந்த குறைகளை நிவர்த்திசெய்ய போதுமான நிதி ஒதுக்கித்தரவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.