கால அவகாசம் தேவை! நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை முடிவடைந்த நிலையில், விசாரணைகளின் இறுதி அறிக்கையை தயார் செய்யும் பணிகளுக்காக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கால எல்லை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்ய கால அவகாசம் தேவை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபையில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.