சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தென் மாகாண முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் சந்திரசிறி கஜதீரவுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளை லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பெற்றிருந்தார்.

அவர் தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதனால், அவருக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற மனோஜ் சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.