அமைச்சர் தயா கமகேவின் 5 பில்லியன் ரூபா கடன் வலுவிழக்கச் செய்யப்பட்டது?

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

மக்கள் வங்கியினால் அமைச்சர் தயா கமகேவின் 5 பில்லியன் ரூபா கடன் வலுவிழக்க செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது அமைச்சர் தயா கமகே சீனாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மக்கள் வங்கியின் திருத்தச் சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.