நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட விபரீதம்!

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகப் பெய்யும் பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் மண்சரிவிற்கான அபாயம் நிலவியுள்ளது.

தற்போது குறித்த பகுதிக்கு சென்றுள்ள புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.