இலங்கை நாடாளுமன்ற டுவிட்டர் கணக்கில் ஏற்பட்ட குழப்பம்! ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றம்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் காரணமாக நேற்று இரவு 25 நிமிடங்களாக அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இன்று அதிகாலை மீண்டும் நாடாளுமன்ற டுவிட்டர் கணக்கு மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதுவரையில் அது சைபர் தாக்குதலா அல்லது யாராவது வேண்டும் என்று செய்த செயலா என்பதன் தகவல்கள் வெளியாகவில்லை.

டுவிட்டர் கணக்கில் பதிவாகியிருந்த பதிவுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.