விமான விபத்தில் நால்வர் பலி! எதிர்க்கட்சி தலைவர் கவலை

Report Print Murali Murali in பாராளுமன்றம்

ஹப்புத்தளையில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றில் கவலை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களுக்கு, தனது அஞ்சலியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம் நேற்று காலை ஹப்புத்தளை பிரதேசத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.