ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய சிம்மாசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இடம்பெற உள்ளது.
கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமார் அரை மணித்தியாலமே இடம்பெற்றது.
அன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு மதியம் ஒரு மணிக்கு மீண்டும் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவுற்றது.
இதேவேளை, முன்னதாக நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் நாளையும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.