விடுதலைப்புலிகள் தடையாக இருப்பதாக இந்தியாவும், இலங்கையும் கருதின! இரா.சம்பந்தன்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிக்காரணமாகவே சாதகமான பதில் கிடைத்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சாதகமான தீர்வு ஒன்றுக்காக விடுதலைப்புலிகள் தடையாக இருப்பதாக இந்தியாவும், இலங்கையும் கருதின என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்தநிலையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது அரசியல் தீர்வுக்கு முன்னோடியான காரணமாக கூறப்பட்டது.

எனினும் அரசியல் தீர்வை காணப்போவதாக இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றவில்லை.

இந்த உறுதிமொழிகள் மதிக்கப்படவேண்டும். அவற்றை இலங்கை அரசாங்கம் தடுக்கமுடியாது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்த உறுதிமொழிகளை மீறியதன் மூலம் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக மாத்திரமே சர்வதேச சமூகத்தை இலங்கை பயன்படுத்திக்கொண்டது என்ற தோற்றம் முன்னிலைப்படுத்தப்படும்.

எனவே நடைமுறை அரசாங்கம் பிரிக்கமுடியாத இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்

இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...