சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான கணக்காய்வு அறிக்கையை சமர்பிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதிகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, குறித்த கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

“மத்திய வங்கியின் மூலமாக வெளியிடப்பட்ட பிணை முறிகளின் மோசடி குறித்த விசாரணைகளை நடத்திய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, கணக்காய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி குறித்து கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் அதன் கொடுக்கல் வாங்கல் குறித்து கோப் குழுவினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது மத்திய வங்கியின் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கணக்காய்வு செய்ய தகுதியுடைய சர்வதேச நிபுணர்களால் கணக்காய்வுக்கு சார்பான அறிக்கை மத்திய வங்கிக்கு கிடைத்த பின் கோப் குழுவுக்கு சமர்பிக்கப்பட்டதோடு தெரிவுக்குழுவின் தலைவரினால் எழுத்துமூலம் கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி பிணை,முறி மோசடி குறித்த தற்போதைய விசாரணைக்கும், எதிர்கால நீதிமன்ற நடவடிக்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்காக சமர்பிக்கப்படுகின்றது.

அதன் பின் கோப் குழுவினால் இந்த அறிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுறுத்தப்பட்டதால் கோப் குழுவும் காலாவதியாகியது.

எட்டாவது நாடாளுமன்றின் நான்காவது அமர்விற்காக கோப் குழு மீள் நியமிக்கப்பட்டு அந்த அறிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக இன்னும் சிறிதுநாட்கள் ஆகும் என்பதால் இதனிடையே எனக்கு இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமையவும், நாடாளுமன்றத்திற்கு இருக்கின்ற அரசியலமைப்பு அதிகாரத்திற்கு அமையவும் எந்தவொரு வெளிக்கள அழுத்தமும் இன்றி சுயாதீன தீர்மானம் எடுக்கும் அதிகாரம் என்பதை முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் நினைவுபடுத்துகிறேன்.

அதற்கமைய கணக்காய்வு அறிக்கையை தயாரிக்க எடுத்த பிரயத்தனங்களைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவற்றை கையளிப்பதே உசிதமாகும்.

இதற்கமைய இன்றைய தினம் அந்த அறிக்கையை சபையில் சமர்பிப்பிக்கின்றேன். அதனூடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் விசாரணைக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Latest Offers

loading...