கூடுதலான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ள மூன்று தமிழ் எம்.பிக்கள்

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

கூடுதலான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

ஐந்தாவது இடத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுள்ளார்.

அந்த வகையில் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநேசன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அதனை உரியவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதில் பெரும் பங்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கே உள்ளது. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

எனவே நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாமல் அல்லது இயலுமாவரை அதிகமாக சமூகமளிக்கும் போதே மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த முடியும்.

இதன் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பிடித்துள்ளமை பெருமைக்குரிய விடயமே என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers

loading...