சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இறுவட்டுகள் விநியோகம்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பான இறுவட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

ரஞ்சன் ராமநாயக்க குறித்த இறுவட்டுக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையில் குறித்த இறுவட்டுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவை அடுத்த கிழமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கரு ஜயசூரிய கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவிருக்கிறது .

Latest Offers