நாடாளுமன்றம் நாளை கலைக்கப்பட்டால் ஓய்வூதியத்தை இழக்கும் 64 உறுப்பினர்கள்

Report Print Banu in பாராளுமன்றம்
126Shares

திட்டமிட்டபடி நாளை நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற முடியாத நிலை ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டு காலத்தை முடித்திருக்க வேண்டும்.

அதன்படி, ஓய்வூதிய உரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் இழக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அக் கட்சியை சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழக்க நேரிடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியை சேர்ந்த ஒருவரும் ஓய்வூதிய உரிமைகளை இழக்ககூடுமென தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி நாளை நள்ளிரவில் வெளியிடப்பட உள்ளது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.