புதிய நாடாளுமன்றின் சபாநாயகர் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

ஒன்பதாவது நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன, 80,595 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில், ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வானது எதிர்வரும் 20ம் திகதி கூடவுள்ள நிலையில் இதன்போது அவர் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சபாநாயகர் பதவியை ஏற்றுகொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை ஏற்குமாறு சாமல் ராஜபக்சவிடம் கோரப்பட்ட போதிலும், அவர் அந்த கோரிக்கையை நிராகரித்து, மக்கள் பணியாற்றக்கூடிய ஒரு அமைச்சு பதவியை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 74 வயதான மஹிந்த யாப்பா அபேவர்தன 1983ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.