நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் மரண தண்டனை கைதி

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேமலால் ஜயசேகர, சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரேமலால் திஸாநாயக்க தற்போது வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது கோரிக்கை தொடர்பாக ஆலோசனையை பெற்றுக்கொள்ள அதனை நீதியமைச்சு அனுப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரி நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகரவுக்கு அண்மையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.