ஜனாதிபதி கோட்டாபயவின் அக்கிராசன உரை மீது 20இல் வாக்கெடுப்புக் கோர முடியாது!

Report Print Rakesh in பாராளுமன்றம்

புதிய அரசின் கொள்கைப் பிரகடனத்தை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20ம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றம் பிற்பகல் 3 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.

இதன்பிரகாரம் பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும். இதன்போதே ஜனாதிபதியால் புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படும்.

ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்கம் தொடர்பில் பிறிதொரு நாளில் விவாதம் நடத்தப்படும்.

ஆனால், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பைக் கோர முடியாது என்பதுடன் வாக்கெடுப்பை நடத்தவும் முடியாது.