2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் எப்போது சமர்ப்பிக்கப்படும்?

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்
42Shares

2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்கம் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச நேற்று அமைச்சரவையில் இது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.