20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது!

Report Print Murali Murali in பாராளுமன்றம்
74Shares

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் வரைவு இன்று நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20வது திருத்தச் சட்டம் செப்டம்பர் 22ம் திகதி சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில், 20வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 20வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் எந்த மாற்றமும் இன்றி தாக்கல் செயவதற்கு அமைச்சரவை முடியு செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 20 வது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டது, இருப்பினும் அது முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.