வன்னி மக்களின் பெரும் பாதிப்பு சபையில் செல்வம் எம்.பி எடுத்துரைப்பு

Report Print Rakesh in பாராளுமன்றம்

வன இலாகா மற்றும் மகாவலி வலயம் என்பன வன்னி மாவட்ட மக்களுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"இந்த விடயங்கள் தொடர்பாகவும், வன்னி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் அமைச்சர்களை அனுப்பி ஆராயுமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கின்றோம்" - என்றார்.