சமாதான நீதவான்களுக்கான கல்வித் தகுதி தொடர்பில் நீதியமைச்சர் தெரிவித்துள்ள விடயம்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

நீதியமைச்சு இனிவரும் காலங்களில் சமாதான நீதவான்களை நியமிக்கும் போது 60 வயதுக்கும் குறைந்தவர்களாக இருந்தால் அவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று நீதியமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

சமாதான நீதவான்களை நியமிக்கும் தற்போதுள்ள நடைமுறையில் குறைந்த பட்ச தகுதி எதுவும் இல்லை.

எதிர்காலத்தில் 60 வயதுக்கும் குறைவான நபர்கள் சமாதான நீதவான்களாக நியமிக்கப்படும் போது அவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்துள்ளார்களாக என்பது ஆராயப்படும்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டுள்ள விதம் மற்றும் மாற்று கல்வித் தகுதிகள் ஆராயப்படும்.

கல்வித் தகுதியை மாத்திரம் அடிப்படையாக கொண்டு சமாதான நீதவான்கள் நியமிக்கப்படக் கூடாது என நான் நம்புகிறேன்.

இதனை விட சமூக சேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நபர்களையும் இந்த பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.