நாடாளுமன்றத்தில் கோபமாக பதிலளித்த நீதியமைச்சர்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

டை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்றி, எனக்கு விருப்பமான உடையை நான் அணிக்கின்றேன். என்ன பிரச்சினை?.

இங்கு இனவாதத்தை தூண்ட வேண்டாம், என கடும் கோபத்துடன் பதிலளித்தார்.

இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவான இவர், சண்டியன், ரவுடி போல் கோபத்துடன் நடந்து கொள்ளும் விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது புத்திஜீவி தனமா?. அலி சப்றிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இறுதியில் தான் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அமைச்சர் அலி சப்றி மன்னிப்பு கோரினார்.