அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடி மறைக்கின்றது! எதிர்க்கட்சித் தலைவர் சபையில் குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடி மறைக்கின்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது நாட்டில் பாரியளவில் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கொவிட் - 19 நோய்த் தொற்றாளர்கள் தொடர்பிலான பரிசோதனைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை.

அத்துடன் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான கருவிகள் பழுதடைந்துள்ளன. இந்த விடயத்தை அரசாங்கம் மூடி மறைக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் எதனையும் மூடி மறைக்கவில்லை எனவும், 95 நாட்களில் முதல் 50000 பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மினுவன்கொட சம்பவத்தின் பின்னர் ஏழு நாட்களில் ஒரு லட்சம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.