நாட்டில் இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை! சுகாதார அமைச்சர்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

நாட்டில் இன்னமும் சமூகத் தொற்று நிலைமை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கொவிட் - 19 வைரஸ் தொற்று சமூகத் தொற்று நிலைமையாக மாற்றமடையவில்லை.

சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று சமூகத் தொற்று நிலைமை ஏற்படவில்லை என்பதனை சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அண்மைய நாட்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.