கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்தார் சஜித்! சுகாதார அமைச்சர் தகவல்

Report Print Murali Murali in பாராளுமன்றம்
553Shares

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் வேகமாக பரவி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சகம் இத்தகைய நடவடிக்கைகளை திறமையாக மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

யாலயில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் தங்கியிருந்த ஹோட்டலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்ட யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கயிருந்தார். யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கியிருந்ததை அறிந்த சுகாதார அதிகாரிகள் அவரை உடனடியாக எச்சரித்தனர்.

இலங்கையின் சுகாதார அமைப்பு எவ்வளவு சிறந்தது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவருக்கு தகவல்களையும் அவர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் வழங்கினோம் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.