அமைச்சர் விமல் வீரவன்சவை நாடாளுமன்றில் வைத்து தாக்க முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரைத் தாக்கும் முயற்சி, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட, அமைச்சரைத் தாக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தத்தின் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜெயந்த கெட்டகொட, விமல் வீரவன்சவைத் தாக்க முயன்றதாக செய்தி வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், விமல் வீரவன்ச முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.