மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல! எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்
162Shares

மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அது தான் தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது கட்சியின் நிலைப்பாடா என நீதியமைச்சர் அலி சப்றி, எதிர்க்கட்சித் தலைவரிடம் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் சஜித் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஆளும் கட்சிக்குள் போன்று தனிப்பட்ட நிலைப்பாடுகள் இல்லை எனவும் பொது நிலைப்பாடே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.