ஒரு ஆபத்தான இருண்ட நாளாக இந்த நாளை பதிவு செய்து கொள்ளுங்கள்! சிறிதரன் எம்.பி

Report Print Mohan Mohan in பாராளுமன்றம்
253Shares

72 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இதுவரை ஒரு வார்த்தைகளையும் பேசமுடியவிலை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

10 வருடங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், 30 வருடம் ஒரு இராணுவ பிரிவிற்கு பொறுப்பாளராகவும் இருந்த ஒருவர் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இராணுவச் சிந்தனைகளோடு பதவியேற்றிருக்கின்றார்.

இந்த நாட்டிலே கடந்த 72 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பாக அவர் பதிவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை எந்த ஒரு வார்த்தைகளையும் அவரால் பேசவோ, சொல்லவோ முடியவில்லை.

இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடா அல்லது இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மதங்கள், இனங்கள் மதிக்கப்படுகின்ற ஒரு நாடா என்பதை முதலில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்

ஒருவரிடம் அதிகாரத்தை நீங்கள் கொடுக்கின்றீர்கள், ஒரு ஆபத்தான இருண்ட நாளாக இந்த நாளை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.