ஜனாசா விவகாரத்தில் அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுக்கும் என ஹக்கீம் நம்பிக்கை!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
66Shares

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசா விவகாரத்தில் அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் காரணமாக நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அரசாங்கம் தீர்வு வழங்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதனால் நோய்த் தொற்று பரவும் என்பதற்கு விஞ்ஞாபூர்வான நிரூபணங்கள் எதுவும் இல்லாத நிலையில் சுகாதார அமைச்சு காலத்திற்கு காலம் முரண்பட்ட கருத்துக்களை இந்த விடயத்தில் வெளியிட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கமானது அவர்களது மத நம்பிக்கையின் மிக முக்கியமான அம்சங்களின் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.