இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மூன்று ஜனாதிபதிகள் அமர்வில் பங்கேற்பு!

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்
89Shares

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மூன்று ஜனாதிபதிகள் அமர்வில் பங்கேற்ற நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நடப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று அமர்வில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தொடர்புத்துறை திணைக்களத்தின் தகவல்படி மூன்று ஜனாதிபதிகள் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றமை இதுவே இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவை என்று அறிவித்துள்ளது.